Seine-Saint-Denis : மிக மோசமான நிலையில் பல்வேறு பாடசாலைகள்!
8 பங்குனி 2024 வெள்ளி 03:21 | பார்வைகள் : 6738
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, பாடசாலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். 93 ஆம் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பாடசாலைகளின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், கதிரை மேசைகள் சேதமடைந்தும், கழிவறைகள் உடைந்தும் சிதிலமடைந்தும் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Saint-Denis இல் உள்ள பாடசாலை ஒன்றின் கழிவறைக் கூரை இடிந்து விழுந்துள்ளது. அதில் தற்போதும் பாரிய அளவிலான ஓட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aulnay-sous-Bois நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் கழிவறை இருக்கை உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
அதே Aulnay-sous-Bois அகரில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் கதிரை மேசைகள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது.
அதன் புகைப்படங்களை சுவரொட்டிகளாக வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி Seine-Saint-Denis inter-union தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.