Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தினேஷ் கார்த்திக்! வெளியான தகவல்

ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தினேஷ் கார்த்திக்! வெளியான தகவல்

7 பங்குனி 2024 வியாழன் 08:15 | பார்வைகள் : 6510


இந்த ஐபிஎல் சீசனுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விடைபெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

38 வயதாகும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது RCB அணியில் விளையாடி வருகிறார். அவரை 5.5 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

Best Finisher என்ற பெயருடன் வலம் வந்த தினேஷ் கார்த்திக், 2022ஆம் ஆண்டு சீசனில் 55 சராசரியுடன் 330 ஓட்டங்கள் குவித்தார். 

ஆனால், கடந்த ஐபிஎல் சீசனில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தமாக 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். 

2024ஆம் ஆண்டு சீசனின் தொடக்க போட்டியில் RCB அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 2024 சீசனுடன் ஐபிஎல் தொடருக்கு முழுக்கு போடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூன் மாதம் 39 வயதில் அடியெடுத்து வைக்க உள்ள தினேஷ் கார்த்திக், தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விரைவில் இறுதி முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும், ஐபிஎல் தொடரில் இருந்து அவர் வெளியேறும் பட்சத்தில் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

வர்த்தக‌ விளம்பரங்கள்