Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 15 வயது சிறுவன்

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 15 வயது சிறுவன்

7 பங்குனி 2024 வியாழன் 08:45 | பார்வைகள் : 3426


சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் பதின்ம வயதினர் ஒருவர் நாடுகடத்தப்படும் அபாயத்துக்குள்ளாகியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Zurich மாகாணத்தில் வாழ்ந்துவரும் 15 வயதுடைய ஒருவர், கடந்த வாரம், யூதர் ஒருவரைக் கத்தியால் குத்தியுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட நபர் படுகாயமடைந்துள்ளார்.

பொதுவாக இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். 25 வயது வரை அவர் நீதிமன்ற அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்படலாம்.

ஆனால், இந்த நபர் துனிசிய நாட்டவர் ஆவார். அவர் தனது 3ஆவது வயதில் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளார்.

அவர் சுவிஸ் துனிசிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால், தற்போது அவரது குடியுரிமை பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முடிவு செய்ய மாகாணங்களுக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், Zurich மாகாண பாதுகாப்புத்துறை இயக்குநரான Mario Fehr, அந்த பதின்ம வயதினரின் குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும் என கோரியுள்ளார். ஆகவே, அந்த நபர் நாடுகடத்தப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்