காஸா மீதான போர்... சீனா வலியுறுத்தல்
7 பங்குனி 2024 வியாழன் 10:42 | பார்வைகள் : 4030
காஸாவில் நடைபெறும் யுத்தமானது நாகரிகத்துக்கு ஓர் அவமானம் என சீனா விமர்சித்துள்ளது.
உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான யுத்தத்துக்கு இன்றுடன் 5 மாதங்கள் பூர்த்தியாகின்றன.
இந்நிலையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பெய்ஜிங்கில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் காஸா யுத்தம் குறித்து கூறுகையில், இது மனித குலத்துக்கு ஒரு துயரம் என்பதுடன், இன்றைய நாகரிகத்துக்கு அவமானமாகும் எனக் கூறினார்.
சுர்வதேச சமூகம் அவசரமாக செயற்பட்டு காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அவசர மனிதாபிமான உதவிகளை உறுதிப்படுத்துவது தார்மீக பொறுப்பாகும் எனவும் அவர் கூறினார்.
கடந்த ஒக்டோபர் முதல் காஸாவில் யுத்த்தினால் 30700 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காஸாவில் ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெறுகின்றன. போர்நிறுத்த நிபந்தனைகளை தரப்பினரும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மத்தியஸ்தர்கள் திணறுகின்றனர்.