அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களிலும் பலத்த பாதுகாப்பு!
7 பங்குனி 2024 வியாழன் 11:43 | பார்வைகள் : 11480
நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டு தலக்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், மற்றும் தற்காலிக வழிபாட்டுத்தலங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
அதேவேளை, ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஈதுல் பித்ர் (l’Aïd-el-Fitr) நாட்களில் மேலும் அதிகபட்ச பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan