Paristamil Navigation Paristamil advert login

அஜித் மருத்துவமனையில் அனுமதி..

அஜித் மருத்துவமனையில் அனுமதி..

7 பங்குனி 2024 வியாழன் 13:14 | பார்வைகள் : 4792


அஜித் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் அஜித் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் திடீரென அவர் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இதுகுறித்து அஜித் தரப்பினர் விளக்கம் அளித்த போது ’அஜித் உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இது ஒரு வழக்கமான மருத்துவ சோதனை என்றும் மருத்துவ சோதனைக்காகவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்