கடிதங்களை ஆற்றில் வீசியெறிந்த தபாலக ஊழியர் கைது!
8 சித்திரை 2024 திங்கள் 13:34 | பார்வைகள் : 5208
கடிதங்களை உரியவரிடம் விநியோகம் செய்யாமல் ஆற்றில் வீசியெறிந்த தபாலக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rochefort, (Charente-Maritime) நகர தபாலகத்தில் பணிபுரியும் 20 வயதுடைய இளம் ஊழியர் ஒருவரே பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கிட்டத்தட்ட 400 தபால்களை அவர் ஆற்றில் வீசியுள்ளார்.
Martrou viaduct மேம்பாலத்தில் இருந்து கடிதங்களை தூக்கி வீசிய நிலையில், அவற்றை பாதசாரி ஒருவர் ஆற்றங்கரையில் இருந்து கண்டெடுத்து தபாலகத்துக்கு அறிவித்துள்ளார்.
அதையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு, பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் அவர் பணிபுரிந்த பகுதியில் கடுமையான குளிர் நிலவியதாக தெரிவிக்கப்பட்டு அவர் கடிதங்களை விநியோகிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.