Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் கலந்துள்ள பக்டீரியா! - ஒலிம்பிக் போட்டிகளில் சிக்கல்!!

சென் நதியில் கலந்துள்ள பக்டீரியா! - ஒலிம்பிக் போட்டிகளில் சிக்கல்!!

8 சித்திரை 2024 திங்கள் 14:37 | பார்வைகள் : 3725


சென் நதியில் இரண்டு வகையான பக்டீயாக்கள் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், சென் நதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகங்களை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

Escherichia coli மற்றும் enterococci ஆகிய இரு பக்டீரியாக்களே சென் நதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எனவும், சாதாரண அளவை விடவும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Pont de l'Alma மற்றும் Pont Alexandre III நீச்சல் தடாகங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததிலேயே இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. 

எவ்வாறாயினும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென் நதி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்