1.9€ யூரோக்களை நெருங்குகிறது பெற்றோல்..!!

8 சித்திரை 2024 திங்கள் 16:59 | பார்வைகள் : 17055
பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. பெற்றோல் ஒரு லிட்டர் 1.9€ யூரோக்களை நெருங்கியுள்ளது.
டீசல் ஒரு லிட்டர் தற்போது €1.7899 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்தவாரத்தோடு ஒப்பிடுகையில் 2.5 சதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, 95-E10 ரக பெற்றோல் €1.89645 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்தவாரத்தில் இருந்து 3.2 சதங்கள் அதிகரித்துள்ளன.
முன்னதாக ஜனவரி 12 ஆம் திகதி ஒரு லிட்டர் பெற்றோல் €1.7645 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தது. இன்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 13 சதங்கள் குறைவாகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025