Rambouillet : பதினைந்து பேருந்துகள் தீயில் எரிந்து நாசம்!
8 சித்திரை 2024 திங்கள் 17:21 | பார்வைகள் : 11096
நேற்று ஏப்ரல் 7 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை Rambouillet நகரில் தரித்து நின்றி பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

இரவு 11.30 மணி அளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து பேருந்துகள் தீக்கிரையாகியுள்ளன. தீ பரவியதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு பெரும் போராட்டத்துக்கு மத்தியில் தீ அணைக்கப்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டது. சேவையில் இருந்த பேருந்துகள் தீக்கிரையானதால், இன்று திங்கட்கிழமை காலை பேருந்து சேவைகள் தடைப்பட்டன.
இந்த தீபரவலினால் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan