ரமழான் : திகதி அறிவிப்பு!
8 சித்திரை 2024 திங்கள் 17:55 | பார்வைகள் : 6003
புனித ரமழான் பெருநாள் வரும் ஏப்ரல் 10, புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளதாக பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நோம்பு மாதம் வரும் புதன்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது. உலகம் முழுவதும் 1 பில்லியன் இஸ்லாமியர்கள் இந்த நோன்பு மாதத்தினை கொண்டாடியிருந்தார்கள். இந்நிலையில், வரும் புதன்கிழமை ஈதுல் பித்ர் (Eid al-Fitr) (புனித ரமழான்) கொண்டாடப்பட உள்ளதாக சவுதி அரேபிய இஸ்லாமிய தலைமையகம் அறிவித்துள்ளது. அதே நாளியேலே பிரான்சிலும் ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் என La Grande Mosquée de Paris சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
ரமழான் கொண்டாடப்படும் நாள் இஸ்லாமியர்களின் லூனார் நாட்காட்சியின் அடிப்படையில் பிறையினை அடையாளம் கண்டு கொண்டாடப்படுகிறது. ஒரு மாத நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு இறுதி நாளில் ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.