Paristamil Navigation Paristamil advert login

சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை

சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை

9 சித்திரை 2024 செவ்வாய் 09:18 | பார்வைகள் : 1800


உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள்.

ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா நகரில், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் 309 பேர் சூரியனைப்போல மஞ்சள் நிறத்தில் உடையணிந்து ஒன்று திரண்டார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உட்பட, பலர், பல்வேறு காரணங்களுக்காக, இந்த அரிய நிகழ்வின்போது கின்னஸ் சாதனை படைக்கக் கூடியது, தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்ததாக தெரிவித்தார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்