பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
9 சித்திரை 2024 செவ்வாய் 09:32 | பார்வைகள் : 3067
ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம்.
அந்த நிகழ்வின் காரணமாக, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் வாட்டிவதைக்கிறது. இதனால், சஹாரா பாலைவனத்திலிருந்து தூசி பறந்துவந்து ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூன்று நாட்களுக்கு மூட உள்ளது.
ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்துகொண்டிருப்பதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளது.
இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும். ஆகவே, விமானங்களால் பயணிக்க முடியாது.
விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம். எனவே, ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.