தீவிபத்தில் மூவர்பலி - ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூடு - சூடுபிடிக்கும் விசாரணை!!
9 சித்திரை 2024 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 16735
தீவிபத்தில் மூவர்பலி - ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூடு - சூடுபிடிக்கும் விசாரணை!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் 11 இலுள்ள 146, rue de Charonne இல் இருக்கும் ஒரு எட்டு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் ஏழாவது மாடியில், தீப்பற்றிக் கொண்டதால் உடனடியாக தீயணைப்பப் படை வீரர்கள் விரைந்து தீயணைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
ஒரு வீட்டில் பிடித்த தீ அடுத்த வீட்டிலும் பரவி உள்ளது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஒரு நபர் யன்னலால் குதித்துத் தப்பிக்க முயன்ற வேளை கீழே வீழ்ந்து சாவடைந்துள்ளார்.

தீயை அணைத்த வீரர்கள் எரிந்த வீட்டிற்குள் இருந்து சாவடைந்த இருவரின் உடலங்களை மீட்டுள்ளனர்.
காவற்துறையின் சோதனையில் சாவடைந்த ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையை மறைக்க, கொலையாளிகள் இந்தத் தீவிபத்தை ஏற்படுத்தி அடையாளங்களை அழித்துத் தப்பித்து இருக்கலாம் என்ற ரீதியில் தீவிர விசாரiணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொல்லப்படட இரண்ணடாவது நபரின் சாவிற்கான காரணமும் உடற்கூற்றுப் பரிசோதனையின் ஊடாகவே தெரிய வரும் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan