குளிர்பானங்கள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுமா?
14 ஆவணி 2023 திங்கள் 03:59 | பார்வைகள் : 3165
வெயில் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் கார்பனேற்ற பானங்களை அதிகம் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
குளிர்பானங்களில் உள்ள கார்போனிக் ஆசிட் நாவில் ஏற்படும் சென்சேஷன் தொடர்ந்து அந்த பானங்களுக்கு அடிமையாக்கும்.
கார்பனேற்ற பானங்களை அருந்துவது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
கார்பனேற்ற பானங்களில் உள்ள சோடா நுகர்வு உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையேற்ற பொருட்கள் டைப் 2 நீரிழிவு ரோஉ அபாயத்தை அதிகரிக்கிறது.
டயட் குளிர்பானங்களும் ஒரு நாளைக்கு இரண்டு கப் மேல் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்குளிர்பானங்கள் அந்த சமயத்திற்கு தாகத்தை தணிப்பது போல தோன்றினாலும் தாகத்தை அதிகரிக்கிறது.
இதனால் இதயமும் பலவீனப்படுகிறது. இதய பாதிப்புகளினால் மரண வாயிலுக்கும் பலர் செல்கின்றனர். எனவே இயற்கையாக கிடைக்கக் கூடிய பழரசங்களை தேர்ந்தேடுங்கள். இது போன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கை நிறமூட்டப்பட்ட குளிர்பானங்களை அருகிலும் கொண்டு வராதீர்கள்.