அலையில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் பலி!

10 சித்திரை 2024 புதன் 08:16 | பார்வைகள் : 13142
நேற்று ஏப்ரல் 9 ஆம் திகதி, ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பிரான்சின் Bréhal (Normandie) நகரில் இச்சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 73 வயதுடைய ஆண் பெண் என இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடற்கொந்தளிப்பினால் இராட்சத அலைகள் எழுந்து படகை மூழ்கடித்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர் அவசர இலக்கத்தில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். மீட்புப் படையினர் வந்திருந்த போதும் இருவரையும் மீட்க முடியாமல் போயுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025