ரொறன்ரோவில் வீட்டு வரி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள்
10 சித்திரை 2024 புதன் 08:19 | பார்வைகள் : 3038
ரொறன்ரோவில் வீட்டு வரி தொடர்பில் 55000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளை காலியாக வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது வரி விதிக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது.
கடந்த ஆண்டில் தங்ளகது வீடுகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு வரி அறவீடு குறித்த அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில வீட்டு உரிமையாளர்கள் வரிச் செலுத்த வேண்டிய இறுதித் திகதியான மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த மறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரில் நிலவி வரும் வீட்டுத் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு, காலியாக வைத்திருக்கப்படும் வீடுகள் மீது வரி அறவீடு செய்யப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக வீடு பற்றிய தகவல்களை உரிய முறையில் ஆவணப்படுத்தியிருந்தால் அவர்கள் மீது தாமதக் கட்டணம் அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் நகராட்சி நிர்வாகத்திடம் 55000 வீட்டு உரிமையாளர்கள் பிழையாக வரி அறவீடு செய்வதற்கான அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.