காசா அனுபவங்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ள சர்வதேச மருத்துவர்கள் குழு
10 சித்திரை 2024 புதன் 10:19 | பார்வைகள் : 1370
காசாவின் மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச குழு அங்கு யுத்தம் காரணமாக பாலஸ்தீன சிறுவர்களிற்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகள் குறித்து கடு;ம் அதிர்ச்சியடைந்;துள்ளதாக தெரிவித்துள்ளது.
காசாவின் பிரதான மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டவேளை சர்வதேச மருத்துவர்கள் குழு மிக மோசமான அனுபவங்களை எதிர்கொள்ள தயாராகயிருந்தது, எனினும் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தம் சிறுவர்களிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் ஒன்றினால் மூளையின் காயம் ஏற்பட்டதால் குழந்தையொன்று உயிரிழந்தது,அதன் மண்டையோட்டில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
அவரது உறவினரான மற்றுமொரு குழந்தை அதேதாக்குதலில் கடும் காயங்களை எதிர்கொண்டு உயிருக்காக பேராடுகின்றது - அதன் முகத்தில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.
தனது பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமை தெரியாமல் பத்து வயது சிறுவன் ஒருவன் வலியில் கதறுகின்றான்.
அவனிற்கு அருகில் அவனது சகோதரி அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனால் சகோதரியின் உடல் முழுவதும் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த சிறுவனால் சகோதரியை அடையாளம் காணமுடியவில்லை.
ஜோர்தானை சேர்ந்த குழந்தைகளிற்கான மருத்துவர் தன்யா ஹஜ் ஹசான் இதனை மனதை வருத்தும் இந்த விபரங்களை அசோசியேட்டட் பிரசிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
காசாவின் டெய்ர்அல் பலா நகரின் அல்அக்சா தியாகிகள் மருத்துவமனையில் பத்து மணிநேரத்தை செலவிட்ட பின்னர் தான் பார்த்த அனுபவங்களை அவர் விபரித்துள்ளார்.
காசா குறித்து அதிக அனுபவம் உள்ளவரான ஹஜ்ஹசான் யுத்தத்தின் மோசமான பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்துள்ளார்,சமீபத்தில் அவர் இரண்டு வாரங்கள் காசாவில் மருத்துவ பணியில் ஈடுபட்டார்.
ஆறுமாத யுத்தத்தின் பின்னர் காசாவின் மருத்துவதுறை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது காசாவின் 36 மருத்துவமனைகளில் ஒரு சில மருத்துவமனைகளே இயங்குகின்றன ஏனைய மருத்துவமனைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன அல்லது எரிபொருள் மருந்து இல்லாததால் தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன - இந்த மருத்துவமனைகளை இஸ்ரேலிய படையினர் சூழ்ந்துள்ளனர் அல்லது மோதல் காரணமாக இந்த மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அல்அக்சா மருத்துவமனை போன்றவை குறைந்தளவு வசதிகளுடன் அதிகளவு நோயாளர்களிற்கு சிகிச்சை வழங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மருத்துவமனையின்தீவிர சிகிச்சை பிரிவில் அதிகளவிற்கு சிறுவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர் குழந்தைகளும் காணப்படுகின்றன - பான்டேஜினால் சுற்றப்பட்ட ஒக்சிசன் வழங்கப்பட்ட நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.
இந்தமருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்ற அல்லது அவர்களிற்கு உயிரளிப்பதற்கே நான் அதிக நேரத்தை செலவிட்டேன் என தெரிவித்த ஹஜ்ஹசான் இது காசாவின் ஏனைய மருத்துவமனைகள் என்ன நிலையிலிருக்கும் என்பதை சொல்கின்றது என குறிப்பிட்டார்.
அருகில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதால் ஹஜ்ஹசானும் அவரது குழுவினரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.
இது நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரிப்பதால் மருத்துவமனை எதிர்கொள்ளும் சுமைiயை அவர்கள் நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியது என தெரிவித்தார் காசாவில் உள்ள சர்வதேச மீட்பு குழுவின் தலைவர் அர்வின்ட் தாஸ்.
அவரது அமைப்பும் பாலஸ்தீனீயர்களிற்கான மருத்து அமைப்பும் ஹஜ்ஹசானும் ஏனையவர்களும் காசாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது.
மருத்துவமனையில் நிரம்பிவழியும் நோயாளிகளை பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார் ஜோர்தானை சேர்ந்த முஸ்தபா அபு காசிம்.
நோயாளிகளை அனுமதிப்பதற்கு இடமில்லை தாழ்வாரங்கள் மெத்தைகள் போர்வைகள் நிலத்தில் நோயாளிகள் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி