சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்ற ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
10 சித்திரை 2024 புதன் 11:57 | பார்வைகள் : 3797
சுவிஸ் நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காததால், மனித உரிமைகள் ஆணையத்தை நாடிய சுவிட்சர்லாந்தில் வாழும் பெண்கள் நான்கு பேருக்கு ஆதரவாக அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புவி வெப்பமயமாதல், தங்கள் வாழ்க்கைச்சூழல் மற்றும் உடல் நலன் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் சுவிஸ் நீதிமன்றத்தில் நான்கு பெண்கள் வழக்குத் தொடர, அவர்களுக்கு அங்கு தோல்வியே கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, அவர்கள் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாடினார்கள்.
அந்த நீதிமன்றம், அந்தப் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, நாடுகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து தங்கள் மக்களை சிறந்த முறையில் பாதுகாக்கவேண்டும் என மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் பலரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்கள்.