Paristamil Navigation Paristamil advert login

€10 பில்லியன் யூரோக்களை சேமிக்க அரசு திட்டம்!!

€10 பில்லியன் யூரோக்களை சேமிக்க அரசு திட்டம்!!

10 சித்திரை 2024 புதன் 18:25 | பார்வைகள் : 3957


பாரிய பற்றாக்குறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசாங்கம், இந்த 2024 ஆம் ஆண்டில் €10 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் திட்டம் ஒன்றை இன்று அறிவித்துள்ளது.

இன்று ஏப்ரல் 10, புதன்கிழமை பொருளாதார அமைச்சர் ஒரு முக்கிய சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். அரச திறைசேரியில் ஏற்பட்டுள்ள பணப்பற்றாக்குறையை நிர்வத்தி செய்ய இந்த ஆண்டிலேயே €10 மில்லியன் யூரோக்கள் நிதி சேமிக்க வேண்டும் என்பதே அந்த திட்டமாகும். அதனை செயற்படுத்த பல அரச நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரச கட்டிடங்கள் கட்டுவது, அமைச்சர்களூடாக வழங்கப்படும் பொது நிதி அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 பில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் எனவும், மீதமுள்ள 5 பில்லியன் யூரோக்களை நாட்டில் உள்ள எரிசக்தி நிறுவனங்களிடம் மேலதிக வரி அறவிடுதல், அரசு வைத்துள்ள பங்குகளை திரும்ப பெறுதல் உள்ளிட்டவையால் €5 பில்லியன் யூரோக்கள் திரும்பப்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்த ஆண்டு நிலவரம் மட்டுமே. வரும் 2025 ஆம் ஆண்டில் €20 பில்லியன் யூரோக்களை சேமிக்க அரசு ஆலோசித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்