Paristamil Navigation Paristamil advert login

உலகின் நீளமான தாடி கொண்ட பெண்!

உலகின் நீளமான தாடி கொண்ட பெண்!

14 ஆவணி 2023 திங்கள் 07:46 | பார்வைகள் : 2089


அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் உலகின் நீளமான தாடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த பெண் எரின் ஹனிகட் (38). இவருக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) காரணமாக முகத்தில் தாடி அதிகப்படியாக வளர தொடங்கியுள்ளது.

இதனால் பல சவால்களை சந்தித்த எரின், கடந்த பிப்ரவரி 8ஆம் திகதி உலகின் மிக நீளமான தாடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார்.

ஹனிகட் தாடியின் நீளம் 11.8 அங்குலம் (30 செ.மீ) ஆகும். இது முன்பு சாதனை படைத்த விவியன் வீலரின் (75) தாடியின் நீளத்தை விட அதிகம் (10 அங்குலம்) ஆகும்.

தனது 13 வயதில் ஒரு நாளைக்கு 3 முறை வரை ஷேவிங் மற்றும் வாக்சிங் போன்ற முறைகளை முயற்சி செய்த எரின், பின்னர் தாடியை வளர்க்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளார்.

ஆனால் பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் ஒரு பகுதியளவு கண் பார்வையை இழந்துள்ளார். அதன் பின்னர் இயற்கையாகவே தாடியை வளர்க்க முடிவு செய்துள்ளார்.


இதற்கிடையில் பாக்டீரியா தொற்று காரணமாக தனது ஒரு காலினை இழக்கும் சூழலுக்கு ஹனிகட் தள்ளப்பட்டார். தற்போது தாடியை பெருமையுடன் வளர்த்து வரும் ஹனிகட், அதனை அவமானத்திற்கு பதிலாக வலிமையின் சின்னமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்