70 ஆண்டுகளுக்கு முன்னர் - VAT வரியை அறிமுகப்படுத்திய பிரான்ஸ்!!

11 சித்திரை 2024 வியாழன் 10:26 | பார்வைகள் : 8912
மதிப்பு கூட்டு வரிகள் (taxe sur la valeur ajoutée) அல்லது TVA- ஆங்கிலத்தில் - VAT) வரிகள் இன்று உலகம் முழுவதும் பிரபலம். இதனை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Maurice Lauré என்பவரே இந்த வரியினை அறிமுகப்படுத்தினார். எழுத்தாளரான இவர், இரண்டாம் உலகப்போரின் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி René Coty இன் கீழ் ’பிரெஞ்சு வரி ஆய்வாளராக’ கடமையாற்றினார். பின்னர் சில ஆண்டுகளிலேயே Direction générale des impôts துறைக்கு நிர்வாக இயக்குனரும் ஆனார்.
அப்போது அதான் அவர், இந்த VAT வரியை அறிமுகப்படுத்தினார். பணம் கொடுத்து மக்கள் ஒரு பொருளை வாங்கும் போது, அந்த தொகையின் மதிப்பில் ஒரு சிறிய அளவை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதே அந்த வரி விதிப்பின் சாராம்சமாகும்.
இந்த வரி ஏய்பினால் அரசு பல மடங்கு பணத்தினை சேமித்தது. வேறு பல நலத்திட்டங்களுக்கு அதனை பயன்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் அழிவில் இருந்து பிரான்ஸ் தன்னை மீட்டெடுக்க இந்த வரி அறவீடு உதவியாக இருந்தது.
பின்னர் உலக நாடுகள் இந்த வரி திட்டத்தை தங்களது நாடுகளுக்கும் எடுத்துச் சென்றன. வரி அறவிடும் தொகை ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே மாறுபடும் என்றபோதும், இன்று ஒரு சில நாடுகளைத் தவித்து ஏனைய அனைத்து நாடுகளிலும் இந்த வரி ஏய்ப்பு நடைமுறையில் உள்ளது.
ஏப்ரல் 10, 1954 ஆம் ஆண்டு இந்த VAT வரி முதன்முறையாக பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அரசாங்கத்தின் முதுகெலும்பாகவும் இருக்கும் இந்த VAT வரி அறவீடு, நேற்றுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.