கனடாவில் பயன்படுத்தும் ரீசார்ஜ் பற்றரி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
11 சித்திரை 2024 வியாழன் 10:26 | பார்வைகள் : 7436
கனடாவில் லித்தியம் அயன் பற்றரி வகைகளை பயன்படுத்துவொருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லித்தியம் அயன் (lithium-ion) பற்றரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக கனடாவின் தீயணைப்பு பிரதானிகள் அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரீசார்ஜ் செய்து பயன்படுத்தப்படும் பற்றரி வகைகள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் வெகுவாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் ரொறன்ரோவில் பற்றரி தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை 90 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
2022ம் ஆண்டில் 29 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், வான்கூவாரில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவங்களில் பெரும்பாலானவை பற்றரிகள் மூலம் ஏற்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
ஈ பைக்குகள், ஈ ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் ரீசார்ஜபல் பற்றரிகளே அதிகளவில் தீப்பற்றிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லித்தியம் அயன் பற்றரி வகைகள் மிக வேகமாக பழுதடையக் கூடியவை என தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan