Paristamil Navigation Paristamil advert login

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை ஏற்க மாட்டோம் - மம்தா திட்டவட்டம்

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை ஏற்க மாட்டோம் - மம்தா திட்டவட்டம்

11 சித்திரை 2024 வியாழன் 10:29 | பார்வைகள் : 1995


ரமலான் பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது,

"நாட்டுக்காக ரத்தம் சிந்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நாட்டுக்காக சித்திரவதைகளைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான் அனைத்து மதங்களிலும் நல்லிணக்கத்தை விரும்புகிறேன். 

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம். தேர்தலின் போது, சிலர் கலவரங்களை உருவாக்க முயற்சிப்பார்கள். அந்த சதித்திட்டத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாராலும் நமக்கு தீங்கு செய்ய முடியாது.

யாராவது கலவரம் செய்ய வந்தால் கூலாக இருங்கள். குண்டுவெடிப்பு நடந்தால் அனைவரையும் கைது செய்ய, தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) அனுப்புகிறார்கள். அனைவரையும் கைது செய்வதன் மூலம் உங்கள் நாடு பாழாகிவிடும். நமக்கு அழகான வானம் வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்