மீண்டும் கொவிட் 19 தடுப்பூசிகள்!
11 சித்திரை 2024 வியாழன் 16:15 | பார்வைகள் : 5620
கொவிட் 19 தொற்றுக்கு எதிராக மீண்டும் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் போது பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பிரான்சுக்கு வருகை தருவார்கள் என்பதால், இந்த கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரையான நாட்களில், நாடு முழுவதும் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. அதேவேளை, எளிதில் தொற்றுக்குள்ளாகக்கூடியவர்கள், நீண்டகால நோயுடன் வாழ்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதற்கான பிரச்சாரபணிகள் இடம்பெற்று வருகிறது. முதியோர் காப்பகங்கள் (EHPAD/USLD) மருத்துவர் விடுதிகள் உள்ளிட்டவற்றில் வசிக்கும் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.