Paristamil Navigation Paristamil advert login

போருக்கு தயாராகும் வட கொரியா - கிம் ஜோங் அறிவிப்பு

 போருக்கு தயாராகும் வட கொரியா - கிம் ஜோங் அறிவிப்பு

11 சித்திரை 2024 வியாழன் 16:19 | பார்வைகள் : 7752


வட கொரியாவை சுற்றியுள்ள நிலையற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, முன்னெப்போதையும் விட தற்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதன்மையான ராணுவப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டுள்ள கிம் போர் தொடர்பில் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆயுதங்களை பெருக்குவதில் கிம் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

அத்துடன் ரஷ்யாவுடன் நெருக்கமான இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்கியுள்ளது. வட கொரியாவுடன் ராண மோதலுக்கு எதிரிகள் துணிந்தால், வட கொரியாவால் மரண அடி தர தங்களால் முடியும் என்று கிம் சூளுரைத்துள்ளார்.

முன்னெப்போதையும் விட தற்போது தான் போருக்கு தயாராக வேண்டிய காலம் என்றும் கிம் தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்