Paristamil Navigation Paristamil advert login

கானூன் சூறாவளி - வெள்ளத்தில் மூழ்கிய ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம்

கானூன் சூறாவளி - வெள்ளத்தில் மூழ்கிய ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம்

14 ஆவணி 2023 திங்கள் 08:35 | பார்வைகள் : 10739


கடந்த சில் தினங்களாக கானூன் சூறாவளி தாக்கி கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசி வந்துள்ளது.

இந்நிலையில் கானூன் சூறாவளியால் பெய்த கனமழையின் காரணமாக ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம் வெள்ளத்தி்ல் மூழ்கியுள்ளது.

அங்குள்ள உசுரிஸ்க் மற்றும் ஸ்பாஸ்க் டால்னி நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உசுரிஸ்க் நகரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் 40 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்