பரிசில் துப்பாக்கிச்சூடு! - விசாரணைகள் ஆரம்பம்!

12 சித்திரை 2024 வெள்ளி 08:24 | பார்வைகள் : 6206
பரிசில் நேற்று ஏப்ரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
19 ஆம் வட்டாரத்தில் உள்ள rue de la Marseillaise வீதியில் நண்பகலுக்குப் பின்னர் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. நான்கு தடவைகள் துப்பாக்கி முழக்கம் கேட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு அசம்பாவிதங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. எவரும் காயமடையவில்லை எனவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஒருவர காவல்துறையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு தடவைகள் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் முழக்கம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.