ஸ்மார்ட்போன்களால் இளைஞர்கள் பாதிப்பு - ஆய்வு தகவல்
12 சித்திரை 2024 வெள்ளி 12:15 | பார்வைகள் : 8194
சமூக வலைதளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இளைஞர்களிடையே மனநோயை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்பில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
குறிப்பாக Teenage குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடக செயலிகளின் பயன்பாட்டால் அவர்களின் மனநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் பிரித்தானியாவில் இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இளைஞர்களிடையே மனக் கவலை அதிகரித்து வருவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
GenZ (Generation Z) எனப்படும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 40 சதவீதம் பேர் கடந்த ஆண்டில் ஒருமுறையாவது மனநலப் பிரச்னைகளை சந்தித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
11 முதல் 14 வயதுக்குட்பட்ட 6,639 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 16 சதவீதம் பேர் கவலையையும், 17 சதவீதம் பேர் மனச்சோர்வையும், 14 சதவீதம் பேர் கடுமையான மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர்.
2022ல் அவுஸ்திரேலியாவில் பத்து வயதிற்குள் 93 சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மனநலப் பிரச்சனைகளுக்கு ஸ்மார்ட்போன்களும் சமூக ஊடகங்களும் முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வளரும் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்களின் தீய விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் ஸ்மார்ட்போன்களின் தாக்கத்தை உணர்ந்த அவுஸ்திரேலியா தற்போது வகுப்பறைகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில், புளோரிடா 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்கியுள்ளது. 14 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியை கட்டாயமாக்கியுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan