Paristamil Navigation Paristamil advert login

Seine-Saint-Denis : மகிழுந்து மோதி ஒருவர் பலி!

Seine-Saint-Denis  : மகிழுந்து மோதி ஒருவர் பலி!

13 சித்திரை 2024 சனி 05:28 | பார்வைகள் : 6260


மதுபான விடுதி ஒன்றின் முன்பாக நடந்து சென்ற பாதசாரி ஒருவரை மகிழுந்து ஒன்று மோதி தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 

 Le Bourget (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை காலை  7 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள மதுபான விடுதி ஒன்றின் அருகே நடந்து சென்ற பாதசாரி ஒருவரை, அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியது. இதில் பாதசாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மகிழுந்தைச் செலுத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவர் நிறைந்த மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது Audi  மகிழுந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்