என் வேலையை AI பறித்துக் கொள்ளும்! பில் கேட்ஸ்-க்கு பயம் காட்டிய AI
13 சித்திரை 2024 சனி 06:17 | பார்வைகள் : 1277
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் தன்னுடைய வேலை பறிபோகும் அபாயம் இருப்பதாக கவலைப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலவரம் குறித்து “Unconfuse Me with Bill Gates” என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் Microsoft-ன் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் கலந்து கொண்டு முக்கிய கலந்துரையாடல் நடத்தினர்.
அப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆச்சரியமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சாட் ஜிபிடி போன்ற AI மாதிரிகள் எவ்வாறு சிக்கலான மொழி மற்றும் கருத்துக்களை புரிந்து கொள்கின்றன என்பதைப் பார்த்து வியப்படைந்ததாக தெரிவித்துள்ளார்.
"சேக்ஸ்பியரின் மிகவும் சிக்கலான படைப்புகளை கூட சாட் ஜிபிடி புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது, AI சிக்கலான யோசனைகளை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் முடிவுகளை எடுக்கிறது என்று பில் கேட்ஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், நான் மலேரியா ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன்.
அதற்காக சரியான நபர்களை தேர்ந்தெடுத்து முதலீடும் செய்து வருகிறேன்.
இது குறித்து நான் பெருமை கொள்ளும் போது, “AI என்னிடம் நீங்கள் போய் டென்னிஸ் விளையாடுங்கள்.
என்னிடம் மலேரியா ஒழிப்புக்கான தீர்வு உள்ளது, நீங்கள் மெதுவாக சிந்திக்கும் திறன் கொண்டவர் என தெரிவித்தது.
அப்போது தான் பயந்தேன், என்னுடைய வேலையை AI பறித்துக் கொள்ளுமே என்று Microsoft-ன் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.