Paristamil Navigation Paristamil advert login

நீங்கள் ஒருதலை காதல் செய்கிறீர்களா என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்..

நீங்கள் ஒருதலை காதல் செய்கிறீர்களா என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்..

13 சித்திரை 2024 சனி 14:22 | பார்வைகள் : 1835


நம்முடைய வாழ்வில் வரும் எந்த ஒரு உறவும் நம்முடைய நேர்மறையான வளர்ச்சிக்காக உதவினால் தான் சிறப்பாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ஒரு தனிநபரின் வாழ்வில் காதல் என்று வரும் போது அவரது வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க உதவுவதோடு பல கடின சூழலை எளிதில் கடந்து செல்ல அவரை அனுமதிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக காதல் தன்னலமற்றது. இருப்பினும் தன்னலமற்ற காதல் மற்றும் ஒருதலைப்பட்ச காதல் ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை ஒருவர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சொல்லப்படாத காதல் அல்லது ஒருதலை காதல் என்பது எதிர்பாலினத்தால் விரும்பப்படாத அல்லது புரிந்து கொள்ளப்படாத காதலாக இருக்கிறது. உங்கள் மேல் ஆர்வம் காட்டாத அல்லது காதல் ஏற்படாத ஒருவரை வாழ்க்கை துணையாக அடைய வேண்டும் என்று நினைப்பது நேரத்தை கடத்தும் ஒரு செயல் என்பதோடு உங்கள் வளர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் ஒருதலை காதல் ஒருவபரின் மன நிலையை பாதிக்கிறது, மேலும் அவர் நிஜம் மற்றும் நிழலுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள தவறுகிறார். நீங்கள் ஒருதலை காதல் செய்கிறீர்களா என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவைக்கு அதிகமாக மன்னிப்பு : நீங்கள் பழகும் ஒருவரிடம் எல்லாவற்றுக்கும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறீர்கள் அல்லது கேட்க வேண்டும் என்றால் அந்த உறவில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் மன்னிப்பு என்பது மிக அதிகமாக கேட்கப்படும் போது நீங்கள் இருவரும் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை குறிக்கிறது. மன்னிப்பு கேட்டு மோதலை தவிர்ப்பது உங்கள் சொந்த உணர்வுகளை நீங்கள் நிராகரிப்பதால் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முக்கியத்துவம்: உங்களை விட நீங்கள் அன்பு காட்டும் நபருக்கான சிறிய சிறிய விஷயங்கள் உட்பட அனைத்தும் முக்கியமானவை என்று நீங்கள் நினைத்து செயல்படும் அதே நேரத்தில், குறிப்பிட்ட நபர் உங்கள் விஷயங்களில் போதுமான ஆர்வம் காட்டவில்லை என்றால் நீங்கள் ஒருதலை காதல் உறவில் இருக்கலாம்.

பாதுகாப்பில்லாத உணர்வு: நீங்கள் அன்புடனும், காதலுடனும் பழகும் நபருடனான உறவில் அடிக்கடி பாதுகாப்பின்மையை உணர்ந்தால் அது குறித்து அவரிடம் மனம் விட்டு பேச வேண்டும். உங்கள் எண்ணம் குறித்து எதிர்பாலினத்திடம் தெரிவித்தும் அவர் உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் சிறிதும் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் மட்டுமே அவரை காதலிக்கிறீர்கள் என்றே அர்த்தம். உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால் அவரை விட்டு விலகி விடுங்கள்.

உங்கள் மீதே சந்தேகம்:நீங்கள் அழகாக இருக்கிறீர்களா இல்லையா என்று உங்களுக்கு அடிக்கடி உங்கள் மீதே சந்தேகம் வருகிறதா.. உங்கள் காதலி அல்லது காதலன் உங்களை விரும்புகிறாரா இல்லையா..? என மனதில் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுகிறதா.! இந்த எண்ணம் மற்றும் கேள்விகள் ஒருதலை காதலுக்கான அறிகுறிகளாகும்.

உங்கள் பிளான்களை தீர்மானிப்பது: திரைப்படம் பார்க்க செல்வது முதல் யாரையாவது சந்திப்பது வரை நீங்கள் லைஃப் பார்ட்னராக வேண்டும் என்று நினைக்கும் நபரின் விருப்பப்படி நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறீர்களா என்பதை நீங்களே யோசித்து முடிவுக்கு வாருங்கள். உங்கள் பிளான்களை அவரே தீர்மானிக்கிறார் என்றால் அவர் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதீத அன்பு ஒருதலை காதலாக இருக்கலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்