Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான்

இஸ்ரேலின் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான்

14 சித்திரை 2024 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 11000


ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவென்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்