மீண்டும் பிரபல ஹீரோவுடன் இணைந்த நயன்தாரா..
14 சித்திரை 2024 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 10484
பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்சன் டிராமா’ என்ற திரைப்படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் நிவின் பாலியுடன் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ’டியர் ஸ்டூடண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan