Paristamil Navigation Paristamil advert login

நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு

நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு

14 சித்திரை 2024 ஞாயிறு 10:22 | பார்வைகள் : 1897


பாலிவுட் உச்ச நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்தை நோக்கி இன்று காலை, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாந்த்ராவில் உள்ள சல்மான கானின் வீட்டிற்கு வெளியே இன்று காலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் 5 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, வேகமாக விரைந்து மறைந்தனர்.

சல்மான் கான் வசிக்கும் கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு துப்பாக்கி குண்டு தாக்கியதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் வெளிநாட்டு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சல்மான் கானின் 1998-ம் ஆண்டு மான் வேட்டை சர்ச்சை காரணமாக, லாரன்ஸ் பிஷ்னோய் குழுவின் கொலை மிரட்டலுக்கு அவர் ஆளானார். குறிப்பிட்ட சமூகத்தினர் புனிதமாக கருதும் மான் இனத்தை சல்மான் வேட்டையாடியதாக, அவருக்கு எதிரான குழுவின் மிரட்டல் எழுந்தது.

இந்த வகையில் பிஷ்னோய் குழுவினர் குறிவைத்துள்ள டாப் 10 கொலை பட்டியலில் சல்மான் கான் முதலிடத்தில் இருப்பதாக கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) எச்சரித்து இருந்தது. லாரன்ஸ் பிஷ்னோயின் கையாளானா சம்பத் நெஹ்ரா, சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்தை கண்காணித்ததும் உறுதியானது. இதனையடுத்து நெஹ்ராவை ஹரியானா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 11 அன்று மற்றொரு மிரட்டலுக்கு சல்மான் கான் ஆளானதை அடுத்து, அவருக்கான பாதுகாப்பு ஒய்+ நிலைக்கு உயர்த்தப்பட்டது. இங்கிலாந்திலிருந்து இந்திய மாணவர் ஒருவர் சல்மான் கானுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதில் அந்த நபருக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இவற்றின் மத்தியில் சல்மான்கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதும் மும்பையிலும், பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்