உடை மாற்றும் அறைகள் இல்லை., IPL தொகுப்பாளினி பரபரப்பு பேட்டி
14 சித்திரை 2024 ஞாயிறு 13:33 | பார்வைகள் : 1379
இந்தியன் பிரீமியர் லீக் (IPL), புரோக்கபடி லீக் மற்றும் பல கிரிக்கெட் போட்டிகளுக்கு தெலுங்கு தொகுப்பாளராக பணியாற்றி நல்ல அங்கீகாரம் பெற்றவர் விந்திய விசாகா ().
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது குடும்ப உறுப்பினர்களின் ஊக்கத்தால் தான் தனது தொழிலில் சிறந்து விளங்க முடிகிறது என்று தெரிவித்தார்.
அவர் தனது கல்லூரி நாட்களில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், சில காலம் மாடலிங் பயிற்சியும் எடுத்தார்.
விந்தியா விசாகா சமீபத்தில் தனது மாடலிங் நாட்கள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கல்லூரி நாட்களில் பல அழகுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதனால் மாடலிங் செய்ய விரும்பியுள்ளார்.
பல வேலைகளுக்குப் பிறகு, மாடலிங் பயிற்சி எடுத்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற Fashion Week ஒன்றில் பங்கேற்றார்.
ஆனால், "அதுதான் என்னுடைய முதல் மற்றும் கடைசி நிகழ்ச்சி. அங்குள்ள நிலைமைகள் எனக்குப் பிடிக்கவில்லை. சரியான உடை மாற்றும் அறைகள் இல்லை.
மேடைக்குப் பின்னால் அவர்கள் அனைவருக்கும் முன்னால் மாற வேண்டியிருந்தது. அந்த நிலைமைகளைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அந்த களம் எனக்கு அமையவில்லை போலும். மாடலிங்கை விட்டுவிட்டேன்.
ஆனால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்” என்றார் விந்தியா.
பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆர்வம் இல்லாததால் வேண்டாம் என்று கூறியதாகவும் அவர் கூறினார்.