Paristamil Navigation Paristamil advert login

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டம் -  இஸ்ரேலிய இராணுவம் அனுமதி

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டம் -  இஸ்ரேலிய இராணுவம் அனுமதி

15 சித்திரை 2024 திங்கள் 09:39 | பார்வைகள் : 4966


ஈரானின் முன்னொருபோதும் இல்லாத வான்தாக்குதலை தொடர்ந்து தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளிற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் போர்கால அமைச்சரவையின் நீண்ட நேர சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி ஈரானின் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்னமும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருக்கின்றோம் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த மணித்தியலாங்களில் நாங்கள் தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்