ரொறன்ரோவில் களவாடப்பட்ட வாகனங்கள் மீட்பு

15 சித்திரை 2024 திங்கள் 11:30 | பார்வைகள் : 6457
ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் இந்த வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மொன்றியால் துறைமுகத்தில் அதிகளவான கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்படுவதனால் சட்டவிரோத வாகன ஏற்றுமதிகளை தடை செய்வதில் சவால்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்கள் களவாடப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக வாகனக் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சட்ட ரீதியான வாகன ஏற்றுமதியுடன் சட்டவிரோதமான வாகனங்களும் ஏற்றுமதி செய்யப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1