இலங்கையில் சிறுவனின் உயிரை பறித்த சிலை
15 சித்திரை 2024 திங்கள் 12:41 | பார்வைகள் : 6553
கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் உடலில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan