அணுஆயுத தளங்களில் இருந்து வெளிியேற்றப்பட்ட ஐ.நா ஆய்வாளர்கள்
16 சித்திரை 2024 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 3123
இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தனது அணுசக்தி தளங்களில் இருந்து ஐ.நா ஆய்வாளர்களை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் முற்றிய நிலையில், தெஹ்ரான் மீது விதித்திருந்த விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது.
இதன்மூலம் ஈரானிய விமான நிலையங்கள் மீண்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கவுள்ளன.
இந்த நிலையில் தெஹ்ரானின் அணுமின் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் Rafael Grossi தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஈரான் தனது அணுசக்தி தளங்களை கண்காணிக்கும் ஐ.நா ஆய்வாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து Rafael Grossi தெரிவிக்கையில், ''நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதைக் காணும் வரை ஆய்வாளர்கள் திரும்பி வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். நாங்கள் நாளை மீண்டும் தொடங்கப் போகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களுக்குப் பிறகு தீவிர கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.