கொழும்பில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் குத்திக் கொலை!
16 சித்திரை 2024 செவ்வாய் 15:43 | பார்வைகள் : 6317
கல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொருபன இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத இருவர் வந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (16) அதிகாலை வேளையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan