கனேடியர்களிடையே கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி
15 ஆவணி 2023 செவ்வாய் 10:29 | பார்வைகள் : 11177
கனேடிய மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் கனடிய மக்களிடம் கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது..
கொவிட் 19 பெருந்தொற்றின் புதிய திரிபுகள் தொடர்ச்சியாக உருவாகி வருகின்றது.
இந்நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் சுமார் 75 வீதமானவர்கள் கொவிட் 19க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தடுப்பு மருந்துகள் ஊடாகவும் நோய்த் தாக்கம் ஊடாகவும் பெரும்பான்மையானவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan