சிக்கன் பிரைடு ரைஸ்
17 சித்திரை 2024 புதன் 14:56 | பார்வைகள் : 1102
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன் பிரைடு ரைஸ். அதுவும் இந்த உணவை ரோட்டு கடை முதல் பெரிய ஹோட்டல்கள் என அடிக்கடி வாங்கி சாப்பிடும் நபர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.
எனவே அனைவருக்கும் பிடித்த சிக்கன் பிரைடு ரைஸை வீட்டிலேயே எளிதான செய்முறையில் சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் - 1 கப்
எலும்பில்லா சிக்கன் 65 - தேவையான அளவு
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அகலமான கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அடுப்பின் தீயை குறைத்து இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் 65-ஐ சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அதனுடன் டொமேடோ சாஸ் மற்றும் சோயா சாய் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடுங்கள்.
பின்னர் அதில் வடித்த ஒரு கப் சாதத்தை சேர்த்து கிளறி இதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு தூள் சேர்த்து கிளறி ஓரிரு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் ரெடி.