உக்ரைன் தானிய போக்குவரத்து தொடர்பில் ருமேனியாவின் அறிவிப்பு
15 ஆவணி 2023 செவ்வாய் 10:39 | பார்வைகள் : 4838
உலகின் முதன்மையான தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உக்ரைன் விளங்குகிறது.
போர் காரணமாக முக்கிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியுள்ளது.
உக்ரைனின் வேளாண் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி வருகிறது.
மேலும், ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு முன்பு, டான்யூப் துறைமுகங்கள் உக்ரைனின் தானிய ஏற்றுமதியில் கால் பங்கைக் கொண்டிருந்தன.
பெரிய அகன்ற படகுகளில் தானியம் நிரப்பப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டில் இருக்கும் நதிகள் வழியாக ருமேனியாவின் கான்ஸ்டன்டா துறைமுகத்தில் கொண்டு சேர்க்கப்படும்.
தற்போது அதிக ஊழியர்களை பணிக்கு நியமித்துள்ளதுடன், போக்குவரத்து திறனை அதிகரிக்க ருமேனியா திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் 4 மில்லியன் டன் என அதிகரிக்கப்படும் என்று ருமேனியா போக்குவரத்து அமைச்சர் Sorin Grindeanu தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளுக்கு 14 படகுகளை தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்த கோரிக்கை முன்வைக்கப்படும் என உக்ரைன் தெரிவித்துள்ளது.