போதைப்பொருளுக்கு எதிராக மாபெரும் நடவடிக்கை! - நான்கு தொன் போதைப்பொருளும், 20 மில்லியன் யூரோக்கள் பணமும் மீட்பு!
17 சித்திரை 2024 புதன் 17:14 | பார்வைகள் : 3743
பிரான்சில் "place nette XXL” எனும் போதைப்பொருளுக்கு எதிராக மாபெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை அறிந்ததே. முன் அறிவுப்பு எதுவும் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நகரங்களாக பிரிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரையிலான நடவடிக்கையில் 3,814 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பேர் 600 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 186 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 500 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 4 தொன் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2 0 மில்லியன் யூரோக்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி புதன்கிழமை உள்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.