சிறுவர்களின் பற்களை பாதிக்கும் அவர்கள் பாவிக்கும் பற்பசைகள்.
18 சித்திரை 2024 வியாழன் 06:48 | பார்வைகள் : 4883
பிரான்சில் 60 மில்லியன் சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், சிறுவர்கள் பாவிக்கும் பற்பசைகள் அவர்களின் பற்களுக்கு இடையில் இருக்கும் ஈறுகளை பாதுகப்பதற்குப் பதிலாக அவை ஈறுகளை வெகுவாக பாதிக்ன்கிறது எனும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தங்கள் தங்கள் நிறுவனங்களின் பற்பசைகளை அதிகம் சிறுவர்கள் நாடவும், அதனால் தங்களின் வியாபாரத்தை பெருக்கவும் எண்ணும் பிரபல்யமான நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பு அனுமதித்த அளவை விடவும் அதிகமான (caramel, fructose மற்றும் glucose) போன்ற சக்கரை வகைகளை பற்பசைகளில் சேர்ப்பதே அதற்கு காரணம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவர்கள் தெரியக்கையில் பற்பசைகளில் சக்கரையின் அளவு 0.05%. வீதம் மட்டுமே இருக்கவேண்டும், ஆனால் இன்று அப்படி இல்லை. அளவுக்கு அதிகமாக சக்கரை வகைகள் சேர்க்கப்படுகிறது. இதனால் பக்டீரியாக்களை எதிர்க்க வேண்டிய பற்பசைகள் அதனை வலுவாக்கவே உதவுகிறது எனவும், சரியான பற்பசையில் ஃவுளூரைடு அதிகமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.