பரிசில் ஒட்டக கண்காட்சி? - அனுமதி மறுப்பு..!!
18 சித்திரை 2024 வியாழன் 18:27 | பார்வைகள் : 9940
பரிசில் ஒட்டக கண்காட்சி ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பரிஸ் காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் ஈஃபிள் கோபுரத்துக்கு முன்பாக ‘ஒட்டக கண்காட்சி’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 50 ஒட்டகங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கண்காட்சிக்கு இன்று ஏப்ரல் 18 ஆம் திகதி, வியாழக்கிழமை பரிஸ் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
அதையடுத்து ஏற்பாட்டுக்குழுவினர் இந்த தடையை எதிர்த்து பரிஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அதேவேளை, அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டால் இதே கண்காட்சி Bois de Vincennes இல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan