துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை ஆரம்பம்!
 
                    19 சித்திரை 2024 வெள்ளி 03:55 | பார்வைகள் : 7874
துபாயில் வரலாறு காணாத மழையால் கடந்த 2 நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முனையம் 1-ல் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 16 ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் வெள்ள நீரில் தத்தளித்தது.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
விமான ஓடுபாதையில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலை முதல் விமான நிலையத்தின் முனையம் 1-ல் பகுதி செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan