Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணிக்கு நல்லதல்ல, இந்த விதி தீங்கை விளைவிக்கும்- ரோஹித் சர்மா 

இந்திய அணிக்கு நல்லதல்ல, இந்த விதி தீங்கை விளைவிக்கும்- ரோஹித் சர்மா 

19 சித்திரை 2024 வெள்ளி 05:30 | பார்வைகள் : 1294


Impact Player எனும் விதிமுறை ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கிறது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 'Impact Player' எனும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. இதன்படி 12வதாக ஒரு வீரர் அணிக்கு களமிறங்கி விளையாடுவார்.

இது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியதாக உள்ளது. இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 2022-23ஆம் ஆண்டு சையத் முஷ்தாக் அலி டி20 போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, IPL போட்டியிலும் 'Impact Player' விதி உள்ளதால் தான் அதன் ரசிகன் இல்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், ''நான் Impact Player-யின் பெரிய ரசிகன் அல்ல. சுற்றி இருப்பவர்களுக்கு கொஞ்சம் பொழுதுபோக்கிற்காக விளையாட்டில் இருந்து நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்கிறீர்கள்.

இது ஆல் ரவுண்டர்களை தடுக்கப் போகிறது என்று நான் பொதுவாக உணர்கிறேன். உண்மையிலேயே கிரிக்கெட்டைப் பார்த்தால்...நான் உங்களுக்கு பல உதாரணங்களைத் தர முடியும் - வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்றவர்கள் பந்துவீசவில்லை, இது எங்களுக்கு (இந்திய அணி) நல்ல விடயம் அல்ல'' என தெரிவித்துள்ளார்.        

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்