Paristamil Navigation Paristamil advert login

மிரட்டும் ஆக்சன் கிங் அர்ஜூன்..!

மிரட்டும் ஆக்சன் கிங் அர்ஜூன்..!

15 ஆவணி 2023 செவ்வாய் 15:10 | பார்வைகள் : 3498


இன்று அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக சற்று முன்னர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ’லியோ’ படத்தில் அர்ஜுன் கேரக்டர் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் அதிரடியான ஆக்சன் கிங் அர்ஜுன் மாஸ் ஆக இருக்கும் காட்சிகள், ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. இந்த கேரக்டரை பார்க்கும்போது அவர் ’லியோ’ படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு இணையான ஒரு முக்கிய கேரக்டர் அவருக்கு லோகேஷ் கனகராஜ் வழங்கி உள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்